ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ : நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ : நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ : நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்
Published on

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த நாம் தமிழர் கட்சியின் இளைஞரணியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர், ராஜீவ்காந்தியின் நினைவு தூண் அருகே டிக்டாக் வீடியோவை எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அத்துடன் இந்த வீடியோ காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் அது சர்ச்சையையும் உண்டாக்கியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். துரைமுருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com