வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.. அதிகாரிகளைக் கண்டதும் பணத்தைச் வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்!

வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டதும் பணத்தைச் சாலையோரம் வீசிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்PT WEB

 ஆம்பூர் செய்தியாளர் - ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள வள்ளிப்பட்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகத் தேர்தல் பறக்கும்படை அதிகாரி கணேசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திம்மனூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில், வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த நபர்கள், தேர்தல் அதிகாரிகளைக் கண்டதும், பணம் மற்றும் வாக்காளர் பட்டியலைச் சாலையோரம் தூக்கி வீசிவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், அவர்கள் உடனடியாக அவர்கள் வீசி சென்ற 45 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த நபர்கள் யார்? என்பது குறித்துத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்
“அன்பான மனிதன் ராகுல் அண்ணா மீது அவதூறு பரப்புவது மன வருத்தத்தை தருகிறது” - Village Cooking Channel

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com