\
கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே கூலித்தொழிலாளியின் குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே கூலித்தொழிலாளியின் குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே கூலித்தொழிலாளியின் குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
Published on

சூளகிரி அருகே கூலித் தொழிலாளியின் குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம், பெல்லட்டி கிராமத்தில் அதிகளவில் வசித்து வந்த இருளர் இன மக்கள் பல்வேறு காரணங்களால் அந்த பகுதியில் இருந்து வெளியேறி, வெவ்வேறு இடங்களில் குடியேறினர். அவர்களில் கூலித்தொழிலாளியான ராஜா என்பவர் மட்டும் பெல்லட்டியில் குடிசை அமைத்து மனைவி மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர்களது குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

ராஜா தனது மனைவி, மகன்களுடன் வீட்டை விட்டு பத்திரமாக வெளியேறிய நிலையில் குடிசையில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள், களை எடுக்கும் எந்திரம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து நாசமாகின. இதுதொடர்பான புகாரின் பேரில் சூளகிரி போலீசார் ராஜா குடிசைக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? அவரை அங்கிருந்து வெளியேற்ற இந்த சதி அரங்கேற்றப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com