\
Director Manikandan
Director Manikandanpt desk

‘அய்யா மன்னித்து விடுங்கள்’ - இயக்குநர் மணிகண்டனின் பதக்கத்தை ஒப்படைத்துச் சென்ற கொள்ளையர்கள்!

“அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்; உங்கள் உழைப்பு உங்களுக்கு” - இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்த தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை, மன்னிப்பு கடிதத்துடன் வீட்டிலேயே தொங்க விட்டுச் சென்ற கொள்ளை கும்பல்
Published on

செய்தியாளர்: பிரேம் குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன். கடந்த 8ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பிரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கிடைத்த கடிதம்
இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கிடைத்த கடிதம்pt desk

பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உசிலம்பட்டி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்; உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என்ற கடிதத்துடன் இருந்துள்ளது. இதை கொள்ளை கும்பல் தொங்க விட்டுச் சென்றுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com