கோவை: வானதி சீனிவாசனின் சட்டமன்ற அலுவலகத்திற்கு புகுந்த மர்ம நபர் சாலையோரம் சடலமாக மீட்பு

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்து, கதவை அடைத்த நபரை எச்சரித்து வெளியே தள்ளியுள்ளார் அலுவலக பணியாளர். சிறிது நேரத்தில் அந்த நபர் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளார்.
vanathi srinivasan
vanathi srinivasanpt desk

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றுள்ளார்.

dead body
dead bodypt desk

இந்நிலையில், கதவை சாத்திய மர்ம நபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர் பிடித்து வெளியேற்றினார். இதையடுத்து இதுபற்றி பந்தய சாலை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர் அலுவலக பணியாளர்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர், கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்த தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் உடலை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வானதி சீனிவாசனின் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்தும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com