\
திண்டுக்கல்: பள்ளி மாணவி மர்ம மரணம்: தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல்: பள்ளி மாணவி மர்ம மரணம்: தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல்: பள்ளி மாணவி மர்ம மரணம்: தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
Published on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தில், மர்மமான முறையில் மாணவி இறந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 5ஆம் வகுப்பு படித்த பள்ளி மாணவி பள்ளி வளாகத்திற்கு அருகே எரிந்த நிலையில் உயிரிழந்தார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து சுமார் 10 நாட்கள் காவல்துறை விசாரித்து வந்த நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

மாணவி உயிரிழப்புக்கு பள்ளி ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் எனக்கூறி அவர்களை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் ராஜ துரை, மணிவேல் உள்ளிட்ட மூன்று பேரை பணியிடமாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளாh

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com