பைக்கில் ரூ82 லட்சத்துடன் சென்ற ஊழியரை தாக்கிவிட்டு பணத்தை வழிப்பறி செய்த மர்ம கும்பல்

பைக்கில் ரூ82 லட்சத்துடன் சென்ற ஊழியரை தாக்கிவிட்டு பணத்தை வழிப்பறி செய்த மர்ம கும்பல்

பைக்கில் ரூ82 லட்சத்துடன் சென்ற ஊழியரை தாக்கிவிட்டு பணத்தை வழிப்பறி செய்த மர்ம கும்பல்
Published on

அம்பத்தூர் அருகே பைபாஸ் சாலையில் ரூ.82 லட்சம் வழிப்பறி செய்த மூன்று பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

மாதவரம் பால் பண்ணையில் உள்ள சுரேன் இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான 82 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு விஜயகுமார் என்ற ஊழியர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரவாயிலிருந்து பின் தொடர்ந்து வந்த கும்பல் விஜயகுமாரை, அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே மேம்பாலத்தின் மீது வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை பொதுமக்கள் பார்த்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவர் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையிலான போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com