'எனது உயிருக்கு ஆபத்து'- ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, அவரது மகன் மீது மருமகள் புகார்

'எனது உயிருக்கு ஆபத்து'- ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, அவரது மகன் மீது மருமகள் புகார்
'எனது உயிருக்கு ஆபத்து'- ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, அவரது மகன் மீது மருமகள் புகார்

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி மகன் மீது மருமகள் சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் திலகவதி. இவரது மகன் பிரபு திலக், சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும், சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ருதி திலக் அவரது தந்தையுடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது கணவர் பிரபு திலக், வேயொரு பெண் மருத்துவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக்கொண்டு தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “குழந்தைகள் இருந்ததால் நான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். அவருடைய தாய் காவல்துறை அதிகாரியாக இருந்ததால் எப்போதும் என்னை மிரட்டி நீ எங்களை மீறி நடந்தால் உன்னுடைய வாழ்க்கையை அழித்துவிடுவோம் என்று மிரட்டி வந்தனர். இதையடுத்து தினந்தோறும் குடித்துவிட்டு வந்து சித்திரவதை செய்வார். எனக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. என் கணவராலும் பெண் டாக்டர் ஒருவராலும் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மாமியாரின் அதிகார பலத்தாலும், என்றுமே எனக்கு ஆபத்துள்ளது. ஆகவே என்னை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், எனது திருமணத்தின் போது 170 சவரன் தங்க நகைகளும், ஒரு கோடி ரூபாய் ரொக்கமும் எனது தந்தை வழங்கி இருந்தார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com