”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி

”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி

”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
Published on

சசிகலா விடுதலையானதும் அதிமுக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியதற்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மக்களின் குறைகளை கேட்கும் ஸ்டாலின், ஆட்சியில் இருந்தபோது ஏன் எதுவும் செய்யவில்லை. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அதை ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரின் வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கிறோம். ” என்றார்.

மேலும், முன்னதாக சசிகலா விடுதலையானதும் அதிமுக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த முதல்வர், “ ஜனவரி 27-ஆம் தேதிக்கு பின்பும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும்.” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com