\
"முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்"- எடப்பாடி பழனிசாமி

"முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்"- எடப்பாடி பழனிசாமி

"முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்"- எடப்பாடி பழனிசாமி
Published on

தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிய எடப்பாடி பழனிசாமி, முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, “ தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 74 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com