\
"மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் எனது வாழ்த்துகள்"- ஜகி வாசுதேவ்

"மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் எனது வாழ்த்துகள்"- ஜகி வாசுதேவ்

"மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் எனது வாழ்த்துகள்"- ஜகி வாசுதேவ்
Published on

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ மக்களின் ஆதரவுடன் அரசமைக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக-வுக்கும் வாழ்த்துகள். தற்போதைய சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ளவும், தமிழ் பாரம்பரியத்தின் வளத்தை மீட்டெடுக்கவும் புதிய நிர்வாகத்திற்கு அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். நல்வாழ்த்துகள்.” இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக. தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 74 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com