உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் என்னுடைய வாழ்த்துகள்: திருநாவுகரசர் எம்பி
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் என்னுடைய வாழ்த்துகள் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று, கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்...
தேசிய அளவில் 3-வது அணியை உருவாக்குவதில் மம்தா பானர்ஜி முனைப்பு காட்டுகிறாரா? என்கிற கேள்விக்கு ...
யார் வேண்டுமானாலும் பிரதமராக வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடலாம். ஆனால், பி.ஜே.பிக்கு மாற்று இந்தியாவில் காங்கிரஸ் மட்டுமே. அதேபோல் நரேந்திர மோடிக்கு மாற்றாக அடுத்த பிரதமர் யார் என்றால் கண்டிப்பாக அது ராகுல்காந்தி தான். இந்தியாவில் தற்போதைய நிலையில், பாஜக-வுக்கு மாற்று எது என்று கேட்டால், மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மிகபெரிய கட்சியாக இருப்பது காங்கிரஸ் கட்சி ஒன்று தான்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்த கேள்விக்கு?
அமைச்சராக வேண்டும் என்றால் அதற்கு பிரதானமானது சட்டமன்ற உறுப்பினர் பதவி - எனவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் என்னுடைய வாழ்த்துகள் என்றார்.