“முத்தையா முரளிதரன் நம்பிக்கை துரோகி”-விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

“முத்தையா முரளிதரன் நம்பிக்கை துரோகி”-விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

“முத்தையா முரளிதரன் நம்பிக்கை துரோகி”-விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்
Published on

இனத்துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் முகத்தை, காலம்காலமாக உங்கள் முகமாக வெறுப்போடு எம் மக்கள் பார்க்க வேண்டுமா? என நடிகர் விஜய் சேதுபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா

விஜய் சேதுபதிக்கு, பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில்“ மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்ப கடினம். ஆனால் பொதுமக்கள் வெகுவேகமாக உங்கள் மீது அன்பைக்கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, எதார்த்தமான பேச்சும்..கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்த பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றி கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப்போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள் இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?

எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப்பொருத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கை துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே.. என கேட்கின்றனர்.

அவர்கள் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் என் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு: 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் டார் மீடியா நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

800- திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம். இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக்காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியிட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணைபோகும் உங்களை நினைத்து கோபப்படுவதா? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பதா? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டி பாருங்கள்..பாடம் சொல்லும்.

ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன்  சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத்துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம், ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால்கூட ஈடு செய்ய முடியாது.

உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களின் திறமையை  பயன்படுத்திக்கொள்ள விரும்பினால். அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுகொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு அல்லது எங்கள் மண்ணுக்காக தன்னுயிரையே உயிராயுதமாக உருக்கி என் மண்ணோடு, காற்றோடு, கல்ந்துபோன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை, உலகரங்கில் எடுக்க முன்வா. ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத்துறையினரும் இலவசமாக பணியாற்ற காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com