முத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது!

முத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது!

முத்தூட் கொள்ளை சம்பவம்: காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது!
Published on

முத்தூட் நிதி நிறுவனத்தின் நடந்த கொள்ளை சம்பவத்தில், காதலுடன் சேர்ந்து நாடகமாடிய பெண் ஊழியர் கைது செய்யப் பட்டார்.

கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சனிக்கிழமை 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. 

முகத்தை துணியால் மறைத்தபடி நிதி நிறுவனத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த 2 பெண்களும் மயக்கமடைந்ததாகவும் பிறகு சாவி மூலம் பெட்டக அறையை திறந்த அடையாளம் தெரியாத நபர், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 4 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையனை தேடி வந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் பணியாற்றிய பெண் ஊழியரே, காதலனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. பெண் ஊழியர் ரேணுகா தேவி தன் காதலன் சுரேஷூடன் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி யுள்ளார். சுரேஷ் தாக்குவது போல காதலியை தாக்கி, நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். விசாரணையில் இதை ஒப்புக்கொண்டார் ரேணுகா தேவி. இதையடுத்து அவரையும் அவர் காதலன் சுரேஷையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com