இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன்
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன்முகநூல்

"கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை": முத்தரசன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Published on

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் அதற்கான பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாமக, தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருகிறது. தவெக தனித்து போட்டி என அறிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் தற்போது நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் எடப்பாடி பழனிசாமி திவீர சுற்றுப்பயணம் மேற்கொண்டு இப்போதே தேர்தலுக்கான முன்களப்பணியில் இறங்கியுள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப் பயணம் சென்று வருகிறார்.

இந்த சூழலில் சுற்றுப் பயணத்தின் போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே செல்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு கண்​டனம் தெரி​வித்து இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் வெளி​யிட்ட அறிக்​கை​: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சொந்​த​மாக சிந்​தித்து அரசி​யல் முழக்​கங்​களை உரு​வாக்க முடி​யாமல், கடந்த 2021-ம் ஆண்​டுக்கு முன்பு அதி​முக ஆட்​சி​யில் இருந்​த​போது, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி முன்​வைத்த ‘தமிழகத்தை மீட்​போம்’ என்ற அரசி​யல் முழக்கத்தை, இன்​றைக்கு காலப் பொருத்​தம் இல்​லாமல் பேசி வரு​கிறார். மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணியை எப்​படி​யா​வது பிரித்​து​விட முடி​யாதா என பாடு​பட்டு வருபவர்​களின் அடிமை​போல செயல்​படும் அவர், தனது முயற்​சி​யில் தோல்​வியை தழுவி சித்தம் கலங்கி பேசுகிறார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன்
அஜித் லாக்அப் மரணம்.. சரமாரி கேள்வி எழுப்பிய சீமான்!

ஜிஎஸ்​டி, உணவு பாது​காப்பு சட்​டம், உதய் மின் திட்​டம் போன்ற மக்​களின் உரிமை​களை பறிக்​கும் திட்​டத்​துக்கு எதி​ராக குரல் கொடுத்​தவர் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா. பாஜகவோடு இனி எந்த காலத்​தி​லும் அதி​முக கூட்​டணி அமைக்​காது என்​றார். அவரது வார்த்​தைகளை குப்பை தொட்​டி​யில் வீசி​விட்​டார் பழனி​சாமி. உரிமைக்​காக போராடும் கம்​யூனிஸ்ட் கட்​சியை பற்றி பேச அவருக்கு எந்த தகு​தி​யும் இல்​லை. 2026 தேர்​தலில் முகவரியை இழப்​பது யார் என்​பதை மக்​கள் தீர்​மானிப்​பார்​கள். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com