'இதுதான் தமிழ்நாடு': போராட்டக்களத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட இஸ்லாமியர்கள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் சார்பில் இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று கோவையில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற CAA எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்ட களத்தின் வழியாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர் ஒருவர் போராட்டக்களத்தில் வழியை ஏற்படுத்தி ஐயப்ப பக்தர்களை அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தான் மதம் தாண்டிய மனிதம் என்றும், எல்லா இறைவனும் மனிதத்தைத் தான் போதிக்கிறான் என்பதை இந்த வீடியோ தெளிவாக காட்டுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.