\
நாளை ரம்ஜான் நோன்பு: தலைமை ஹாஜி அறிவிப்பு

நாளை ரம்ஜான் நோன்பு: தலைமை ஹாஜி அறிவிப்பு

நாளை ரம்ஜான் நோன்பு: தலைமை ஹாஜி அறிவிப்பு
Published on: 

ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் ரம்ஜான் நோன்புக்கான பிறை நேற்று தென்படாததால், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இதற்காக, அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை இன்று முதல் தொடங்கும் என தலைமை ஹாஜி அறிவித்தள்ளார். மேலும், நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ’ஷஹர்’ என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com