\
மதுரை: மீனாட்சியம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

மதுரை: மீனாட்சியம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

மதுரை: மீனாட்சியம்மன் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
Published on: 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா தனது 80வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு சென்னை மற்றும் கோவையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் நாளை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இசையென்றால் இளையராஜா எனும் நிகழ்ச்சி நாளை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்துள்ள இளையராஜா இன்று அதிகாலை 6 மணியளவில் மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பக்தர்களோடு பக்தராக நின்று சாமி தரிசனம் செய்த இளையராஜா, சுவாமி மற்றும் அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி என மொத்தமாக 45 நிமிடங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com