”மோடியை பற்றி பேசினாலே கண்ணில் நீர் வருகிறது; யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்”- இளையராஜா உருக்கம்

”இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு கோயில்கள் உள்ளது. ஆனால், இந்தியா முழுவதுக்குமான கோயிலாக ராமர் கோயில் திகழும்” என்று இளையராஜா பேசியுள்ளார்.
Ilayaraja
Ilayarajapt desk

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரதகான சபை அரங்கில் நடைபெற்ற சென்னையில் அயோத்தி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா உரையாற்றினார்.

அப்போது, “ராமர் பிறந்த இடத்திலேயே கோவில் கட்டியுள்ள பிரதமரை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம். மன்னர்கள் கோவில்களை கட்டி வந்தனர் தற்போது ஒரு பிரதமர் கட்டியுள்ளார்.

ram pran pratishtha - modi
ram pran pratishtha - modipe desk

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு கோயில்கள் உள்ளது. ஆனால், இந்தியா முழுவதுக்குமான கோயிலாக ராமர் கோயில் திகழும்.

தஞ்சையில் சோழர்கள் பிரகதீஸ்வரர் கோயிலை கட்டினர் ,பாண்டியர்கள் மதுரையில் மீனாட்சி கோவிலை கட்டினார்கள். ஆனால், உலகத்திலேயே ராமன் பிறந்த இடத்திலேயே ராமனுக்காக கோயிலை மோடி கட்டியுள்ளார்.

இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போயிருக்கிறார்கள் ஆனால், மோடி மட்டுமே சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார். மோடியை பற்றி பேசினாலே கண்ணில் நீர் வருகிறது. அயோத்தி செல்லாமல் தமிழகத்தில் உள்ளது வருத்தத்தை தருகிறது” என்று உருக்கமாக பேசினார் இளையராஜா.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com