\
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை : கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை : கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை : கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரண்
Published on

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

கடந்த 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் மணிகண்டன் என்பவரை அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மணிகண்டனோடு இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் தப்பியோடிவிட்டார். இவர் திருவாரூர் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன் ஆவார். இதனையடுத்து கனகவல்லியை கைது செய்த‌ காவல்துறையினர் சுரேஷை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். 

இந்நிலையில், திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து தந்த முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com