சகாயத்துக்கு கொலை மிரட்டல்: உயர்நீதிமன்றத்தில் புகார்
தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளார்.
கிரானைட் முறைகேடு குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடந்தது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் இன்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. தனக்கும், விசாரணைக்கு உதவிய சேவற்கொடியானுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். தனக்கு உதவிய பார்த்தசாரதி விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். விசாரணை குழுவின் ஆவணங்களை ஒப்படைக்க அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. விசாரணை குழு ஆவணங்களை ஒப்படைக்க, ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.