
மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து ஒருவரை கொல்ல முயன்ற கும்பலை தடுக்க காவலாளி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது.
மானாமதுரையில் உள்ள வங்கிக்கு தங்கமணி என்பவர் வந்திருந்தார். இவர் அமமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தம் இருப்பதாக கைது செய்யப்பட்டவர். இந்நிலையில் கொலைக்கு பழிக்குப்பழியாக தங்கமணியை கொல்ல ஒரு கும்பல் வங்கிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்துள்ளது. அவர் தங்கமணியை கொல்லும் முயற்சியில் ஈடுபட்ட போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து காவலாளி தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் வங்கி வந்த வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காவலாளி மற்றும் தாக்கப்பட்டவர், சுடப்பட்டவர் உள்ளிட்டோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.