முதியவரை எரித்துக் கொல்ல முயற்சி: 4 பேர் கைது!

முதியவரை எரித்துக் கொல்ல முயற்சி: 4 பேர் கைது!

முதியவரை எரித்துக் கொல்ல முயற்சி: 4 பேர் கைது!
Published on

சென்னை கோடம்பாக்கத்தில், சாலையின் ஓரமாக படுத்து உறங்கிய முதியவரை எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சாலையில் கடந்த 4-ம் தேதி உறங்கிக்கொண்டிருந்த ஜப்பார் என்பவரை சிலர் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சிக்கும் காட்சி வெளியானது. இதன் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், காமராஜர் காலனியைச் சேர்ந்த ஷியாம், டெம்போ டிரைவர் புகழேந்தி, மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். ஷியாமின் அம்மாவை குடிபோதையில் ஜப்பார் திட்டியதாகவும் அதனால், ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் ஷியாம் வாக்குமூலம் அளித்தார். சிறுவர்கள் புரசைவாக்கம் கூர்நோக்கு இல்லத்திலும், ஷியாம், புகழேந்தி ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com