\
முரசொலி கண்காட்சி அரங்கு: பார்த்து ரசித்த மு.க.ஸ்டாலின்

முரசொலி கண்காட்சி அரங்கு: பார்த்து ரசித்த மு.க.ஸ்டாலின்

முரசொலி கண்காட்சி அரங்கு: பார்த்து ரசித்த மு.க.ஸ்டாலின்
Published on

முரசொலி பத்திரிகை பவள விழாவை ஒட்டி சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழ் தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி பவள விழா கொண்டாட திமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை வரும் 10-ம் தேதி இந்து பத்திரிகை குழும தலைவர் என்.ராம் திறந்து வைக்க உள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இதற்கான விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் கண்காட்சி அரங்கை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். முரசொலி பத்திரிகையில் கருணாநிதி எழுதிய தலையங்கங்கள், அவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் ஆகியவற்றை ஸ்டாலின் ரசித்துப் பார்த்தார். முரசொலி பத்திரிகை பவள விழாவில் பங்கேற்க அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு கமல், ரஜினி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com