\
“பாஜக உள்ளவரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது” - முரளிதரராவ்

“பாஜக உள்ளவரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது” - முரளிதரராவ்

“பாஜக உள்ளவரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது” - முரளிதரராவ்
Published on


பாரதிய ஜனதா உள்ளவரை தமிழ்நாட்டில் திமுகவினால் ஆட்சியமைக்க முடியாது என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் வனவாசம் செல்ல தயார்‌ என்றும் சவால் விடுத்தார். இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மு.க.ஸ்டாலின் கைப்பாவையாக இருப்பதாகவும் முரளிதரராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக முன் வைக்கும் எந்தப் பொய் பரப்புரைகளும் எடுபடாது என்ற அவர், பாரதிய ஜனதா உள்ளவரை மு‌.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது என்றும் சாடினார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com