முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 1/2 அடி உயர்வு..!

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 1/2 அடி உயர்வு..!

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 1/2 அடி உயர்வு..!
Published on

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் இரண்டாவது நாளாக ஒரே நாளில் மூன்றரை அடி மேலும் உயர்ந்தது. 

முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை ஐந்தாவது நாளாக தொடர்ந்து வலுத்து வருவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக ஒரே நாளில் முன்றரை அடி உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 124.70 அடியாகியுள்ளது. அணைக்கு நீர்வரத்தும் விநாடிக்கு 9,479 கன அடியாக அதிகரித்துள்ளதால், தமிழக குடிநீருக்கான நீர்த்திறப்பும் விநாடிக்கு 1,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து திகரிப்பும், நீர்மட்ட உயர்வும் தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக தென்மேற்கு பருவ மழை அதி தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடியில் வலுத்துவருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையில் 86 மில்லி மீட்டர், தேக்கடியில் 52 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,505 கன அடியிலிருந்து விநாடிக்கு 9,479 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டமும் இரண்டாவது நாளாக ஒரே நாளில் மூன்றரை அடி மேலும் உயர்ந்து 121.10 அடியில் இருந்து 124.70 அடியாக உயர்ந்துள்ளது. தமிழக குடிநீருக்கான நீர்த்திறப்பும் விநாடிக்கு 1,150 கன அடியில் இருந்து விநாடிக்கு 1,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 3,559 மில்லியன் கன அடியாக உள்ளது. 


கன மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று முன் தினம் இரண்டு அடி உயர்ந்தது. நேற்று மூன்று அடி உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் அணை நீர்மட்டம் எட்டு அடி உயர்ந்துள்ளதும், நீர்வரத்து அதிகரித்துள்ளதும் தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com