தமிழ்நாடு
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் இரண்டாம் போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக அணையின் தேக்கடி மதகுப் பகுதியில் நடைபெற்ற தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று, நீரை திறந்து வைத்தார். இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 120 நாட்களுக்கு, வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்படும்.
செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். அத்துடன் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, பேபி அணை பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.