முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் தமிழகத்தின் பாசன மற்றும் குடிநீர் வசதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக கருதப்படும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. இதனையடுத்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் அளவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,108 கனஅடியில் இருந்து 878 கன அடியாக குறைந்துள்ளது.

இதனால் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,333 கனஅடியிலிருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டமும் 122 அடியிலிருந்து குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அணையின் நீர் இருப்பு மூவாயிரத்து 123 மில்லியன் கன அடியாக உள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com