தமிழ்நாடு
முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன் உள்ளது: தமிழக அரசு
முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன் உள்ளது: தமிழக அரசு
முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன் இருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சந்தேகம் எழுப்பியிருந்தது. இதற்கு தமிழக அரசு தற்போது எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருப்பதாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் உறுதித்தன்மை குறித்து மக்கள் மத்தியில் உள்ள பயத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அதிகாரிகளை அனுமதிக்க உத்தரவிடவேண்டும் என்றும் நீதிமன்றத்திற்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.