தமிழ்நாடு
முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான தேக்கடி, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 436 கன அடியிலிருந்து 937 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 122 புள்ளி 70 அடியாகவும், நீர் இருப்பு 3 ஆயிரத்து 163 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்கான நீர் திறப்பு 700 கன அடியிலிருந்து 1000 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தமிழக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.