தமிழ்நாடு
ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலிருந்து முகிலன் டிஸ்சார்ஜ்
ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலிருந்து முகிலன் டிஸ்சார்ஜ்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து முகிலன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பாலியல் புகாரில் கைதான முகிலனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவை தொடர்ந்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக முகிலன் அனுமதிக்கப்பட்டார். முகிலனுக்கு பொது மருத்துவ பரிசோதனை, இதயம் தொடர்பான பரிசோதனை, உளவியல் ரீதியான பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து உடல்நிலை சரியான காரணத்தினால் முகிலன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலனை தற்போது சிபிசிஐடி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்கின்றனர்.