முதுமலை: சாலையில் நடமாடும் கரடிகள் - வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறை எச்சரிக்கை

முதுமலை: சாலையில் நடமாடும் கரடிகள் - வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறை எச்சரிக்கை
முதுமலை: சாலையில் நடமாடும் கரடிகள் - வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறை எச்சரிக்கை

முதுமலை சாலையில் அடிக்கடி நடமாடும் கரடிகளால் வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி சாலையில் சமீப காலமாக கரடிகள் நடமாடுவது அதிகரித்திருக்கிறது. தற்போது தேன் சீசன் துவங்கி உள்ளதால் கரடிகள் சாலைகளில் சுற்றி தரிவதை அதிகமாக காண முடிகின்றது.

அப்படி சாலைக்கு வரும் கரடிகள் வாகனங்களை கண்டு அச்சபடாமல் சாலையிலேயே நின்று விடுகின்றன. ஒருசில நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்கள் கரடிகள் சாலை நின்றால் அதனை பொருட்படுத்தாமல் வாகனங்களை வேகமாக இயக்கி கரடிகளை அச்சுறுத்தி வருகின்றன.

எனவே முதுமலை வனப்பகுதி சாலையில் வாகனங்களை இயக்கும்போது குறைவான வேகத்தில் இயக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. வனப்பகுதி சாலையில் விதிகளை மீறி வாகனங்களை அதிவேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com