\
சாரணர் சாரணியர் தலைவர் மணிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சாரணர் சாரணியர் தலைவர் மணிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சாரணர் சாரணியர் தலைவர் மணிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
Published on

தமிழக சாரண சாரணியர் இயக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குனர் மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்வாகியுள்ள மணி அவர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார். 
இன்று நடந்த தமிழக சாரணர் சாரணியர் இயக்க தேர்தலில் பதிவான 286 வாக்குகளில் 232 வாக்குகள் பெற்று மணி வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மணி, சாரணர் சாரணியர் இயக்கத்தில் குறைகளை களைந்து, அதைப் பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்று கூறியிருந்தார். இதனிடையே இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த ஹெச்.ராஜா தேர்தல் முறையாக நடக்கவில்லை எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால் தேர்தல் முறையாகத்தான் நடந்தது என தேர்தல் அதிகாரி கலாவதி விளக்கமளித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com