\
மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில்!

மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில்!

மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரயில்!
Published on

சென்னை பறக்கும் ரயில்கள், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைய உள்ளது. இதையடுத்து, ரயில் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை எம்.ஆர்.டி.எஸ். எனப்படும் பறக்கும் ரயில் செயல்பட்டு வருகிறது. தினமும் 4 லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய இந்த ரயிலில் 1 லட்சம் பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதனால் தென்னக ரயில்வே-க்கு வருவாய் குறைந்துள்ளது. இதையடுத்து, இதை மாநில அரசு இயக்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. 
இதில், கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் சர்வதேச தரத்துக்கு மாற்றவும் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com