வேளாண் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

வேளாண் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
வேளாண் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

2022-23ஆம் நிதியாண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

2022-23ஆம் நிதியாண்டில் வேளாண் துறைக்கு 33 ஆயிரத்து 7 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே சென்ற நிதியாண்டில் திருந்திய மதிப்பீடாக 32 ஆயிரத்து 775 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3 ஆயிரத்து 204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் மானாவரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் மானாவரி நிலங்கள் பயன்பெறுவதற்கு 132 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த 71 கோடி ரூபாய் மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக 2 ஆயிரத்து 339 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக நிதிநிலை அறிக்கையில் 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்கு மானியமாக டான்ஜெட்கோவிற்கு 5 ஆயிரத்து 157 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com