\
கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி... நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்

கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி... நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்

கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி... நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்
Published on

கிராமசபை கூட்டத்தில் அரசு பேருந்து வசதி கேட்ட 5-ஆம் வகுப்பு மாணவி சஹானாவை நேரில் சந்தித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் கடந்த 26-ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கிராமத்தைச் சேர்ந்த சஹானா என்ற 5 ஆம் வகுப்பு மாணவி, 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளியில் படிக்க அரசு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், நடந்து சென்று வருவதாகவும், பள்ளி சென்று வர அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த செய்தி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இதனை பார்த்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சம்பந்தப்பட்ட மாணவி சஹானாவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

மேலும் ‘கிச்சா பச்சா’ என்ற சிறுகதை புத்தகத்தை சிறுமிக்கு பரிசாக வழங்கினார். அத்துடன் சஹானாவின் கோரிக்கையை போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவித்த அவர் ஓரிரு நாட்களில் பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பேருந்து சேவை தொடங்கும் என மாணவர்கள் மத்தியில் உறுதி அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com