\
எம்.பி வசந்தகுமார் மருத்துவமனையில் கவலைக்கிடம்

எம்.பி வசந்தகுமார் மருத்துவமனையில் கவலைக்கிடம்

எம்.பி வசந்தகுமார் மருத்துவமனையில் கவலைக்கிடம்
Published on

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அவரது மகன் விஜய் வசந்த் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது எனவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவக்குழு தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com