\
முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எம்.பி சத்தியபாமா ஆதரவு

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எம்.பி சத்தியபாமா ஆதரவு

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எம்.பி சத்தியபாமா ஆதரவு
Published on

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு திருப்பூர் அதிமுக எம்.பி. சத்தியபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள் இந்நாள் எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு திருப்பூர் அதிமுக எம்.பி. சத்தியபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இன்று காலை நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் மற்றும் கிருஷ்ணகிரி எம்.பி. அசோக் குமார் ஆகியோர் முதலமைச்சருக்கு நேரில் தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். இன்று ஒரு நாளில் மட்டும் முதலமைச்சருக்கு 3 எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com