Kanimozhi  Annamalai
Kanimozhi Annamalaipt desk

அண்ணா அறிவாலயத்தை யார் பிரித்தெடுக்கிறார்கள் என்று பார்ப்போம் - அண்ணாமலைக்கு கனிமொழி சவால்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களைக் கேட்க கூட ஆளும் பாஜக அரசிற்கு பொறுமை இல்லை என்று திமுக எம்பி. கனிமொழி தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: கோகுல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் பொறியியல் கல்லூரியில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின், உலகின் மிகப்பெரிய பி.ஐ.எஸ் முத்திரை பதிவு ஓவியத்தை படைக்கும் சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

pm modi
pm modipt web

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசியபோது...

பாஜக ஆளாத மாநிலத்தில் சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை போன்று 4 ஆவது கரமாக ஆளுநரை பயன்படுத்தி பிரச்னையை உருவாக்கி எதிராக செயல்படுவதற்கு அவரை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களை கேட்கக் கூட ஆளும் பாஜக அரசிற்கு பொறுமை இல்லை எந்த எதிர் விவாதமாக இருந்தாலும், யார் பேசினாலும் ஏற்றுக் கொள்ள பாஜக அரசு தயாராக இல்லை,

Kanimozhi  Annamalai
விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு.... என்ன காரணம்?

ஜனநாயகத்தின் மீதும் நாடாளுமன்றத்தின் மீதும் உள்ள மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, எதிர்க்கட்சிகள் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை பாஜக அரசு செவி சாய்க்கவில்லை, அண்ணா அறிவாலயமும் திமுகவும் பல பேரை பார்த்துள்ளது. யார் யாரை பிரித்தெடுப்புகிறார்கள் என பார்ப்போம் என்று எம்பி கனிமொழி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com