”வசூல் வேட்டை நடத்தவே அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார் என நிரூபணமாகி உள்ளது” - காங். எம்பி ஜோதிமணி!

அண்ணாமலையின் பாதயாத்திரை வசூலுக்கானது என நிரூபணமாகி உள்ளது என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்தார்.
ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பிpt web

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரைக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக முத்துராமன் என்பவர் மற்றொருவருடன பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், எம்பி ஜோதிமணி கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்..

annamalai
annamalaipt desk

”பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை வசூலுக்கானது. சிவகங்கை மாவட்டத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு ஒருகோடி ரூபாயும், மதுரை மாவட்ட யாத்திரைக்கு 75 லட்சம் ரூபாயும் நன்கொடை கொடுத்ததாக ஆடியோ வைரலாகி வருகிறது. அண்ணாமலைக்கு 1.5 கோடி நன்கொடை கொடுத்த முத்துராமன் என்பவர் அரசு இலட்சினையை தவறாக பயன்படுத்தி குறு, சிறு தொழில் கவுன்சில் என்ற போலியான அமைப்பை நடத்தி வந்துள்ளார்.

இவர் மீது மதுரை மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முத்துராமன் குறு, சிறு தொழில் கவுன்சில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி 50 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அளித்த புகாரில் சேலம் போலீசார் முத்துராமனை கைது செய்தனர்.

கைது செய்த முத்துராமனை பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு தலைவராக உள்ள பால் கனகராஜ் பெயிலில் Manufacturer பால் கனகராஜ் மத்திய அரசின் பேனல் அட்வகேட்டாகவும் உள்ளார்.

Annamalai
AnnamalaiPT

அண்ணாமலை பாதயாத்திரை பாதையில் நிறுத்திவிட்டு வெளிநாடு செல்வது பெருமளவில் பணம் வசூல் செய்யவே என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com