\
எம்.பி தேர்தல் : அதிமுகவில் விருப்பமனு அளித்த ஜெயவர்தன்

எம்.பி தேர்தல் : அதிமுகவில் விருப்பமனு அளித்த ஜெயவர்தன்

எம்.பி தேர்தல் : அதிமுகவில் விருப்பமனு அளித்த ஜெயவர்தன்
Published on

எம்.பி-யும், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை இன்று அளித்தார்.

தற்போது தென் சென்னையின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் ஜெயவர்தன். இவர் அதிமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட இன்று விருப்ப மனு அளித்துள்ளார். அதிமுகவில் கடந்த நான்காம் தேதி முதல் மக்களவை தேர்தல் எம்.பி சீட்டுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. விருப்ப மனு விநியோகம் வரும் 14-ஆம் தேதி‌ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஜெயவர்தன் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கெனவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் விருப்ப மனு அளித்தது வாரிசு அரசியல் என்ற சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஜெயவர்தனும் விருப்ப மனு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com