கேபி பூங்கா விவகாரம்: குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்

கேபி பூங்கா விவகாரம்: குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்
கேபி பூங்கா விவகாரம்: குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை புளியந்தோப்பு கேபி பூங்கா குடிசை மாற்று வாரியத்தில் தரம் இல்லாத வீடுகள் கட்டப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இவற்றுடன் வாரியத்தின் பழைய குடியிருப்புகளும் புதிய கட்டுமானங்களை ஆய்வு செய்ய இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழு, வாரியத்தின் கட்டுமானங்கள், கட்டுமான பொருட்கள், வேலையாட்களின் பணி உள்ளிட்டவற்றை ஆரம்ப நிலையில் இருந்தே தொடர் ஆய்வுக்கு உட்படுத்தி தரத்தை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10,000-க்கும் மேற்பட்ட பழைய குடியிருப்புகளை இடித்து புதிதாக கட்ட உள்ள நிலையில், குடியிருப்புகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஏற்கெனவே சென்னை ஐ.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி-யுடன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், கூடுதலாக அண்ணா பல்கலைக்கழகத்துடனும் 2 ஆண்டுகளுக்கு இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com