3 மாத பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்..!

3 மாத பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்..!

3 மாத பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த தாய்..!
Published on

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் 3 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 9 வயதில் நிதர்சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.‌ இந்நிலையில் இரண்டாவதாக இவர்கள் ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் மனமுடைந்த குணசேகரனின் மனைவி சங்கீதா தனக்கு பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையை வீட்டிலுள்ள அண்டா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெருந்துறை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com