தூக்குக் கயிறில் தாய்: தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயது மகனின் சடலம் - விருது நகரில் பயங்கரம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலம் ஒன்றும் அவரது ஒரு வயது மகன் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் திருக்குமரனுக்கும் மதுரை சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகள் மகாலட்சுமிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தீபக் என்ற ஒரு வயது மகன் உள்ளான். திருக்குமரன் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவணத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் நிலையில், அவருடைய மனைவி மகாலட்சுமி ஒரு வயது குழந்தை தீபக்குடன் அவரது மாமனார் முருகேசன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை முருகேசன் வெளியேச் சென்று விட்டு, மதியம் வீட்டிற்கு திரும்பிய அவர் மகாலட்சுமியை தேடியுள்ளார். இதனையடுத்து மாடிக்குச் சென்று தேடியுள்ளார். அப்போது மகாலட்சுமி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தது தெரிய வந்தது. உடனடியாக தகவலானது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து அவரது மகன் தீபக்கும் அங்கில்லாதது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் காவலர்கள் மாடியில் உள்ள தொட்டியில் சென்று பார்த்தனர். அப்போது தீபக் இறந்த நிலையில் அங்கு கிடந்தான். இதனை தொடர்ந்து அவனையும் மீட்ட காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.