இரண்டு மகன்களை கொன்று தாய் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..!

இரண்டு மகன்களை கொன்று தாய் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..!

இரண்டு மகன்களை கொன்று தாய் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..!
Published on

கடலூர் அருகே இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி சிவசங்கரி. மதிவாணன் அப்பகுதியில் மருந்துக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகனும் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் வழக்கம்போல மருந்துக் கடைக்கு சென்ற மதிவாணன், வேலையை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்த மதிவாணன் பலமுறை சத்தம்போட்டு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. தொடர்ச்சியாக செல்போனில் தொடர்பு கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார் மதிவாணன்.

அங்கு தான் பெற்ற இரண்டு மகன்களும் இறந்துகிடந்துள்ளனர். அத்துடன் மனைவி தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த மதிவாணன் கதறி அழுதுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிவசங்கரி எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. கணவர், தங்கை, தாய், போலீஸ் என 4 பேருக்கு தனித்தனியாக 4 கடிதங்கள் சிவசங்கரி எழுதியது தெரியவந்தது. தற்கொலைக் கடிதத்தில் தன்னுடைய சாவிற்கு கணவர் உள்பட யாரும் காரணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் தானும், கணவரும் கடந்த 15 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவும், கணவருக்கு தான் கஷ்டத்தை கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் கணவர் மிகவும் பொறுமையானவர் என்பதால் தனக்கு தன் கணவரை மிகவும் பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது உடலை உடற்கூராய்வு செய்ய வேண்டாம் எனவும் சிவசங்கரி தன் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மகன்கள் 2 பேரின் கழுத்திலும் நகக்கீறல்கள் இருந்துள்ளன. இதனால் தற்கொலை செய்வதற்கு முன் இரண்டு மகன்களை கழுத்தை நெரித்து சிவசங்கரி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம் இரண்டு குழந்தைகள் மீதும் பூக்களும் தூவப்பட்டிருந்தன. இதனிடையே பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே குழந்தைகள் எப்படி இறந்திருப்பார்கள் என்பது தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com