\
2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை முயற்சி

2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை முயற்சி

2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை முயற்சி
Published on

சென்னையில் 2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு சீனிவாச தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 வயதில் ரோகித் என்ற மகன் உள்ளார். ஸ்ரீதர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

கீதா தன் மகனுடன் அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக தனது கணவர் இறந்தது குறித்து மிகவும் கவலைபட்டு அக்கம் பக்கத்தினருடன் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் இறந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனது மகனுக்கு கொசு மருந்து கொடுத்து விட்டு, தானும் குடித்தார். மேலும் தனது வீட்டின் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குழந்தை சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து பார்த்த போது கீதா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்  உதவியுடன் அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆபத்தான நிலையில் ரோகித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேலும் உயிருக்கு போராடும் கீதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com