\
10 வயது மகளை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை

10 வயது மகளை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை

10 வயது மகளை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை
Published on

தாயே தனது 10 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது. 

புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுசித்ரா (29). இவரது மகள் நிவேதிதா (10). கணவர் சுரேஷ் பிரிந்து சென்றதால், மகளை வளர்க்க முடியாமலும் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி சுசித்ரா சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. அவருக்கு உறவினர்கள் தரப்பிலிருந்து எந்த உதவிகளும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சுசித்ரா, தனது மகள் நிவேதிதாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். அத்துடன் தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் முத்தியால்பேட்டை போலீசார் விரைந்து சென்று தாய்-மகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com