இரண்டு வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தாய் !

இரண்டு வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தாய் !

இரண்டு வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தாய் !
Published on

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். ஒரு செவிலியராக பலரின் உயிரைக் காப்பாற்றிய அவர் முறையற்ற உறவுக்காக பெற்ற பிள்ளையின் உயிரையே பறித்துவிட்டார்.

வேலூர் மாவட்டம் வெள்ளநாயக்கனேரியைச் சேர்ந்தவர் சந்தியா. வயது 20. இவருக்கும் தொட்டிகிணறு ‌என்னுமிடத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் விரோஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து விரோஷனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார் சந்தியா.

திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த சந்தியாவுக்கு மற்றொருவருடன் முறையற்ற உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. குழந்தையை கொன்றுவிட்டு வந்தால் சந்தியாவை ஏற்றுக் கொள்கிறேன் என அந்த நபர் கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி பெற்ற மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த சந்தியா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட விஷ ஊசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக முறையற்ற உறவிற்காக பெற்ற பிள்ளைகளை தாய்மார்களே கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை குன்றத்தூர் அபிராமி, சேலம் பிரியங்காவை தொடர்ந்து சொந்தக் குழந்தையை கொலை செய்த சம்பவத்தில் வேலூர் சந்தியா கைது செய்யப்பட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com