\
உயிரிழந்த நாய்க்குட்டியை வாயில் கவ்வித்திரியும் தாய்

உயிரிழந்த நாய்க்குட்டியை வாயில் கவ்வித்திரியும் தாய்

உயிரிழந்த நாய்க்குட்டியை வாயில் கவ்வித்திரியும் தாய்
Published on: 

மதுரையில், உயிரிழந்த‌ தன்னுடைய நாய்க்குட்டியை அதன் தாய் வாயில் கவ்விக்கொண்டு 2 நாட்களாக சுற்‌றிவருவது காண்போரை கலங்கச் செய்துள்ளது.

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நாய்க்குட்டி தன் தாயுடன் சுற்றி வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த குட்டி நாய் விபத்தில் இறந்தது. இதனை அறியாத தாய் நாய், குட்டியை எழுப்ப முயற்சி செய்தது. அது எழுந்திருக்கவில்லை என்றதும், தனது வாயால் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக சுற்றிக்கொண்டே இருக்கிறது. 

இரண்டு நாட்களாக குட்டி நாய் இறந்தது கூட தெரியாமலே, வாயில் கவ்விக் கொண்டு அந்த தாய் நாய் திரிகிறது. இந்த சம்பவம் காண்போரை கலங்கச் செய்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com