குழந்தை பிறந்த ஒரு நாளில் தாய் உயிரிழப்பு - மருத்துவர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

குழந்தை பிறந்த ஒரு நாளில் தாய் உயிரிழப்பு - மருத்துவர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

குழந்தை பிறந்த ஒரு நாளில் தாய் உயிரிழப்பு - மருத்துவர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
Published on

திருவண்ணாமலையில் குழந்தை பிறந்து ஒரே நாளில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவரது மனைவி வினித்ராவுக்கு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று அறுவை சிகச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று வினித்ரா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டாம் எனக் கூறியும் மருத்துவர்கள் வினித்ராவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததாகவும், மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையினால் அவர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

எனவே அலட்சியமாக சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவுவதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com